Tuesday, January 7, 2014

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(29-12-13 முதல் 04-01-13வரை)


மோட்டோராலா நிறுவனம் தனது மோட்டோ ஜி (Moto G) வகை நுண்ணறி அலைபேசிகளை இந்த ஜனவரி 2014 வாக்கில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

மத்திய அமைச்சர் திரு. மனீஷ் திவாரி 1000 கிராம பஞ்சாயத்துகள் வை-பை தொடர்பைப் பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறை 2014-ம் ஆண்டில் மிக அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக அசோசெம் (Assocham - Associated chambers of Commerce and industry of india) தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் 110 இன்ச் அளவுள்ள அல்ட்ரா எச்டி (ultra HD TV) தொலைக்காட்சிப் பெட்டிகளை அமெரிக்க டாலர் 150,000 -க்கு விற்பனை செய்ய உள்ளது.

கூகுளும், ஆடி மகிழ்வுந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்து காருக்குள் இயங்கும் ஒரு ஆன்ட்ராய்டு இயங்குதள அமைப்பை உருவாக்க உள்ளது.

சாம்சங் நிறுவனம் உலகத்திலேயே முதன் முறையாக அலைபேசிகளில் பயன்படும் 4 GB கொள்ளளவு உடைய ராம்(RAM) நினைவகத்தை உருவாக்கியுள்ளது

இந்தியா மார்ச் 2014 வாக்கில் 155 மில்லியன் இணையப் பயனர்களைக் கொண்டிருக்கும் என ஐஏஎம்ஏஐ(IAMAI - Internet and mobile association of india) தெரிவித்துள்ளது

இந்தியாவின் சுற்றுலாத்துறையின் பெருமைகளை எடுத்தியம்பும் இன்கிரிடிபிள் இந்தியா(Incridible India) இணையதளம் தற்போது 11 இந்திய மொழிகளில் கிடைக்கிறது.

சோனி நிறுவனம் விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய நுண்ணறிபேசியை உருவாக்கவுள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டில் மிகப்பெரிய ஹிட் அடித்த அலைபேசிச் செயலியான ஸ்னாப்சேட் (Snapchat) -ன் தரவுதளத்திலிருந்து கொந்தர்களால் கிட்டத்தட்ட 4.6 மில்லியன் பயனர்களின் பயனர்பெயர் மற்றும் அலைபேசி எண்கள் களவாடப்பட்டது

இந்தமுறை தனது வளாக நேர்காணலில் 1000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்து ஐஐடி காரக்பூர் சாதனை படைத்துள்ளது.

சிடாக் உருவாக்கிய பரம் யுவா II மீகணினி உலகின் மிகக் சிறந்த மின் பயன்படுத்து வினைத்திறமையுடைய (குறைந்த மின்சாரத்தில் அதிக வேலை அ-து வேலை/மின்சாரம்) கணினிகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.  இந்தியாவில் முதலாவது இடத்தையும், ஆசிய அளவில் 9-வது இடத்தையும், உலகளவில் 44-வது இடத்தையும் பெற்றுள்ளது.

நேபாளம் தனது நாடு முழுவதுமாக வை-பை(WiFi) இணைப்பை இலவசமாக தரவுள்ளதாக அறிவித்துள்ளது.

நோக்கியா நிறுவனம்(தற்போது மைக்ரோசாப்ட்-ஆல் கையகப்படுத்தப்பட்டுவிட்டது) தனது சிம்பியன்(Symbian) மற்றும் மீகோ(MeeGo) ஆகிய 2 அலைபேசி இயங்குதளங்களுக்கான (இவ்வியங்குதளத்தில் இயங்கும் அலைபேசிச் செயலிகளுக்கான) ஆதரவை நிறுத்திவிட்டது.  மைக்ரோசாப்டின் அலைபேசி விண்டோஸ் இயங்குதளத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

No comments:

Post a Comment