Wednesday, September 25, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(15-09-13 முதல் 21-09-13வரை)

ஆன்ட்ராய்டு நுண்ணறிபேசிகளில் பிளாக்பெரி மெசஞ்சர் (BlackBerry Messenger) செயலி(App)-ஐ செப்டம்பர் 20 தரவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னணி மின்வெளி பாதுகாப்பியல் நிபுணர்(Cyber security expert) ஒருவர், முன்னணி பங்குச்சந்தையான நாஸ்டாகின்(Nasdaq) இணையதளத்தை hack செய்ய தனக்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆனதாக தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் நுண்ணறிபேசிகளுக்கான செயலிகளை உருவாக்கும் நிறுவனமான Bump -ஐ கையகப்படுத்தியுள்ளது.  இந்நிறுவனம் நுண்ணறிபேசிகளை ஒன்றோடொன்று அசைப்பதன்மூலம் தொடர்பிற்கு கொண்டுவந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு செயலியை Bump(ப(அ)ம்ப்) என்கிற பெயரில் வெளியிட்டுள்ளது.  Bump செயலியை கூகுளின் பிளே ஸ்டோரிலிருந்து பெற இங்கே சொடுக்கவும்.  Bump பயன்பாடு குறித்தான யூடியூப் காணொளி காட்சி



மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது கேன்வாஸ் வரிசை குளிகைக்கணினியின் முதலாவதான கேன்வாஸ் குளிகைக் கணினியை(Canvas Tab P650) இந்திய ரூபாய் சுமார் 16,500 விலையில் வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இணைய உலாவியான இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இருந்த பாதுகாப்பு ஓட்டைக்கான(இது கொந்தர்களால்(hacker) கண்டறியப்பட்டு தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டது) ஒரு புதிய சரிசெய்யும் நிரல் துண்டை(patch) வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் தனது வங்கிச்சேவை தீர்வு மென்பொருளான ஃபின்னாக்கிளின் புதிய பதிப்பை (Finacle 11E) வெளியிட்டுள்ளது.  இதன்மூலம் பன்னாட்டு வங்கிச்சேவை மென்பொருள் வணிகத்தில் முக்கிய இடத்தை பிடிக்குவுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனமான நிகான் நீர் புகாத ஒரு புதிய AW1 கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது நீருக்குள் 15 மீட்டர் ஆழம் வரையான அழுத்தத்தை தாங்கி நீர் புகாவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.  மேலும் 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் அதிர்வை தாங்கிக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் யூடியுப் இணைய இணைப்பின்றி காணொளிக்காட்சிகளை காணும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.  மேலும், இந்த வசதி 48 மணிநேரம் பார்க்கக்கூடிய அளவிற்கு(இணைய இணைப்பின்றி) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மைன்ட்ரீ நிறுவனம் காணொளி கடுங்கண்காணிப்பு(Video Surveillance) மென்பொருள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு நுண்ணறிபேசிகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு தேடல் இடைமுகப்பை(Interface) உருவாக்க திட்டமிட்டுள்ளது.

சிக்ஸ்த்சென்ஸ் என்கிற மென்பொருள் உருவாக்கத்தினால் உலகளவில் மிகப்பரவலாக அறியப்பட்ட பிரணவ் மிஸ்ட்ரி தற்போது சாம்சங் அமெரிக்கா நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றிவருகிறார்.  மேலும், சாம்சங் நிறுவனத்தின் நுண்ணறி கைக்கடிகாரமான சாம்சங் கியர்(Samsung Gear) தயாரிப்பிலும் தற்போது பங்களித்து வருகிறார்.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

No comments:

Post a Comment